
பூமியிலிருந்து நிலவு விலகி செல்வதாக அமெரிக்காவின் விஸ்கான்சின் – மாடிசன் பல்கலை ஆய்வாளர் குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு ஆண்டுதோறும் 3.8 சென்டிமீட்டர் அளவுக்கு விலகிச் செல்கின்றது. இதனால் பூமியில் நாட்களின் நேரம் மாறுபடலாம். அதாவது இதே வேகத்தில் நிலவு விலகிச் சென்றால் அடுத்த இருவது கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது. சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்கு பிறகே இப்போது இருப்பது போல 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும்.