
கர்நாடக மாநிலம் தரவனகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா பகுதியில் கட்டப்பா என்பவருடைய வீட்டின் அருகே 27 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இளம் பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கட்டப்பா வீடு புகுந்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அவரிடம் கூறியுள்ளார்.
அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவரை தாக்கிய கட்டப்பா கற்பழிக்க முயன்றுள்ளார். அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த கட்டப்பா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம் பெண்ணின் கழுத்து மற்றும் முதுகு என உடலில் பல பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இளம் பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் வீட்டுக்கு முன்பு திரண்டு வந்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர்.
தற்போது அந்த இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கட்டப்பாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கட்டப்பா அந்த புது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும் ஏற்கனவே இரண்டு முறை இதே போல வீடு புகுந்து அந்த பெண்ணை தன்னுடைய காம இச்சைக்கு அடைய முயன்றதும்,தற்போது திருமணம் ஆகி கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு திரும்பிய நிலையில் மீண்டும் அவர் அந்த இளம் பெண்ணை கற்பழிக்க முயன்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.