
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு தவளை மற்றும் பூனை உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து ஒரு பாம்பை கொல்கிறது.
வீடியோவில் தவளையின் வாயில் பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அதனை தவளை தன் வாயில் இறுக்கமாக பிடித்துள்ள நிலையில் பூனை அந்த பாம்பை கொல்கிறது. ஒருமுறை அல்ல பலமுறை பூனை அந்த பாம்பை அடிக்கின்றது. பாம்பு தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தும் அதனை தவளையும் பூனையும் விடவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A snake fighting a cat while being eaten by a frog… pic.twitter.com/7MrreEQYlr
— Weird and Terrifying (@weirdterrifying) December 20, 2022