உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு பெண் தன்னுடைய கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் ஒரு கணவன் மனைவி வசித்து வருகிறார்கள். இதில் மனைவிக்கு இரு வாலிபர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் தன் மனைவியின் நடவடிக்கைகளை அந்த கணவன் கவனிக்க தொடங்கிய நிலையில் கடந்த சனிக்கிழமை தன்னுடைய மனைவி அவருடைய கள்ளக்காதலுடன் சென்று கொண்டிருப்பதை பார்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அது பற்றி கேட்டார். அப்போது அவருடைய மனைவி தன்மீது தவறு இல்லாதது போன்று தன்னுடைய காதலனுக்கு ஆதரவு கொடுத்து கணவரை அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை வைத்து அதில் சம்பந்தப்பட்ட கணவன் மனைவி மற்றும் கள்ளக்காதலனை அடையாளம் காண போலீசார் முயற்சித்துள்ளனர்.