போக்குவரத்து சேவைகள் நகரங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு பிரதேசங்களில் வசதியான பயணத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றன. தற்போது ஊபர் போன்ற சேவைகள் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பரந்த அளவிலான வாகன விருப்பங்களை வழங்க முயற்சிக்கின்றன.

இது பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் பாலைவனத்தின் நடுவில் தனியாக சிக்கித் தவிக்கும் பெண் அவசரமாக தனது செல்போனில் உள்ள ஊபர் செயலியைத் திறந்து முன்பதிவு செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களுடன், அங்கு ஒட்டக சவாரிக்கும் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுகிறார். தன் நிலையைப் பொருத்ததாக இருக்கும் என்பதால், அந்த பெண் உடனடியாக ஒட்டக சவாரியை முன்பதிவு செய்கிறார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு வாலிபர் ஒட்டகத்துடன் வந்து உதவுகிறார். பாலைவனத்தில் சிக்கிய அவருக்கு இது மிகுந்த நிம்மதியை அளித்தது.