ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சில காயங்களுடன் உயிர்த்தப்பிய பயணிகள் பலர் வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நிலவரம் குறித்து ஒடிசா சுகாதாரத்துறை அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 382 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பிற அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.