ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டும் என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார். கோரமண்டல் ரயில் விபத்தின் காட்சிகளை தத்ரூபமாக வரைந்து அருகில் காளி காப்பாற்றுவாள் என்று குறியீட்டுடன் PRAYING FOR SPEEDY RECOVERY OF SURVIVORS என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.