ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில் விபத்தில் உயிர்பிழைத்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜலக்ஷ்மி அழைத்துள்ள பேட்டியில், விபத்து நடந்த போது எனக்கு பயமும் பதற்றமோ இல்லை, கோபம் தான் வந்துச்சு. அவ்வளவு நபர்கள் பயணிக்கும் ரயிலில் ஒரு முதலுதவி பெட்டி கூட வைக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். ஜெனரல் காம்பார்ட்மெண்ட் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸில் இருந்தவர்கள் அதிகம் காயம் அடைந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.