
சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் அஸ்வின் ராஜ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனுப்ரியா (27). இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஐஸ்கிரீம் கீழே கொட்டியதாக கூறப்படுகிறது. அதாவது பிரிட்ஜில் இருந்து ஐஸ்கிரீம் கீழே கொட்டியதால் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் சரியாக கவனிக்க மாட்டாயா மருமகளை மாமியார் சத்தம் போட்டுள்ளார்.
அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென அனுப்ரியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அவரது கணவர் வீட்டிற்கு வந்போது தன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கை குழந்தை தாயில்லாமல் தவிப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.