சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பரபரப்பான பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், சற்றும் பொறுப்பின்றி தனது பைக்கின் மீது பெட்ரோலை வாரி இறைத்து குளிப்பாட்டியுள்ளார்.
மேலும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைவதற்குள், ஏதோ ஒரு போதையில் இருப்பது போல பைத்தியக்காரத்தனமாக நடுரோட்டில் கைகளை வீசி வெறித்தனமாக ஆடத் தொடங்கினார். சிறிதளவு நெருப்புப் பொறி பட்டாலும் ஒட்டுமொத்த பெட்ரோல் பங்க்கே வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதை உணராமல், அவர் செய்த இந்த அலப்பறை அங்கிருந்த வாடிக்கையாளர்களைப் பீதியில் ஆழ்த்தியது.
බයික් එකටත් පෙට්රල්වලින් නාවලා තරුණයෙක් නටපු පිස්සුව සේවකයෙක් නිසා වැළැක්වුණු හැටි#Lankadeepa #SriLanka🇱🇰 #SLnews pic.twitter.com/e1lzLcDHWG
— Lankadeepa (@LankadeepaNews) May 15, 2026
“>
இந்த விபரீத சூழலைத் தூரத்திலிருந்து கவனித்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நொடிப் பொழுதில் அதிரடியாகச் செயல்பட்டார். மற்றவர்கள் பயந்து ஓடிய நிலையில், அந்த ஊழியர் சமயோசித புத்தியுடன் ஓடிவந்து, பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே அந்த வாலிபரைப் பாய்ந்து பிடித்துக் கட்டுப்படுத்தினார்.
மேலும், உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு பெட்ரோல் சிந்திய இடத்தை பாதுகாப்பாக மாற்றியதோடு, அந்த வாலிபரைக் காவல் துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அந்த ஊழியரின் துணிச்சலான செயலுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
