உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் நந்த்பூர் கிராமத்தில் உள்ள ஹனுமான் கோயிலில், கடந்த சில நாட்களாக ஒரு நாய் இடைவிடாமல் சிலைகளைச் சுற்றி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த நாயை ‘பைரவரின்’ அவதாரம் என நம்பிய கிராம மக்கள், அதற்கு மாலை அணிவித்து வழிபடத் தொடங்கினர். ஆனால், ஐந்து நாட்களாக உணவின்றிச் சுற்றி வந்த அந்த நாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, விலங்கு நல ஆர்வலர்கள் அதனை மீட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
अब इसे क्या कहेंगे आप…..
एक कुत्ते ने मूर्ति के चक्कर क्या लगा लिए अब कुत्ते की ही पूजा होने लगी 👇 pic.twitter.com/x9JP5xsRA6— Advocate 𝑴𝒖𝒎𝒕𝒂𝒋 ,Congress Councillor (@ansari2487) January 18, 2026
“>
அங்கு நடத்தப்பட்ட எம்.ஆர்.ஐ (MRI) மற்றும் இரத்தப் பரிசோதனையில், அந்த நாய்க்கு ‘அனாபிளாஸ்மா’ (Anaplasma) எனப்படும் ‘டிக் ஃபீவர்’ (Tick Fever) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொற்றினால் நாயின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு , சமநிலையை இழந்ததால் தான் அது வட்டமாகச் சுற்றி வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
अंधविश्वास का चरम! जिस कु!त्ते को डॉक्टर की ज़रूरत थी, लोग उसे पैसे चढ़ा रहे हैं।
अब आप ही सोचिए, देश में वोट किन मुद्दों पर दिए जाते होंगे?
pic.twitter.com/RiOBhp6e5g— SHIVANI VERMA (@ShivaniV2901) January 18, 2026
“>
தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும் அந்த நாய்க்கு, ஆன்மீக உந்துதல் எதுவும் இல்லை என்றும், அது ஒரு தீவிரமான நோயின் அறிகுறி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
