சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காந்தி காட் பகுதியில் ஒரு திருமணத்திற்கு பேருந்தில் சுமார் 70 பேர் ஜார்கண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பனேஷரா திர்கி (18), மகாந்தி குஹூர் (30), மமேஷ் படா(13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 53 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.