ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை வீரர் திலக் வர்மாவுக்கு நேர்ந்த ஒரு சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மும்பை அணி பேட்டிங் செய்தபோது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வீசிய 12-வது ஓவரின் கடைசிப் பந்து திலக் வர்மாவின் மணிக்கட்டில் பலமாகத் தாக்கியது. இதில் அவர் கையில் அணிந்திருந்த கருவி சுக்குநூறாக உடைந்ததைக் கண்ட ரசிகர்கள், திலக் வர்மா அணிந்திருந்தது சுமார் 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரம் என்றும், அது இப்போது வீணாகிவிட்டது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பரப்பத் தொடங்கினர். இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Jamie Overton bro, just broke Tilak Varma’s ₹2.13 crore watch 😭⌚
Bro then casually asks, “Are you okay Tilak?” like nothing happened 🤣🤣
pic.twitter.com/RcqYNMmwL1— AK 45 (@ImRo45_Club) May 2, 2026
“>
இருப்பினும், அந்த “வாட்ச்” குறித்த உண்மைத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திலக் வர்மா அணிந்திருந்தது 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கடிகாரம் அல்ல; அது விராட் கோலி, ஷுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்கள் தங்கள் உடல்நிலையைக் கண்காணிக்க அணியும் ‘WHOOP BAND’ எனும் ஃபிட்னஸ் கருவியாகும்.
திரையே இல்லாத இந்த பேண்டின் உண்மையான விலை சுமார் 49,000 ரூபாய் மட்டுமே. ஜேமி ஓவர்டன் பந்து பட்ட வேகத்தில் இந்தக் கருவி பழுதடைந்தாலும், அது 2 கோடி ரூபாய் நஷ்டம் என்ற வதந்திகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓவர்டன் உடனடியாக ஓடிச் சென்று திலக்கிடம் நலம் விசாரித்தாலும், ரசிகர்களின் கற்பனை குதிரை மட்டும் 2 கோடி ரூபாய்க்குப் பந்தயம் கட்டி சோசியல் மீடியாவை அதிர வைத்துவிட்டது.
