இசையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, எண்ணற்ற ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட பிரபல இசையமைப்பாளர் ஒருவர், தனது சொந்த வீட்டிலேயே யாரும் அற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் கலையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த ஒரு கலைஞனின் வாழ்க்கை, இறுதிக்காலத்தில் யாருமற்ற தனிமையில் இப்படி ஒரு கொடூரமான முடிவைச் சந்திக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சுமார் ஐந்து நாட்களாக அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டே இருந்த நிலையில், அங்கிருந்து வீசிய துர்நாற்றத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த காட்சி காண்போரைக் கண் கலங்க வைத்தது. ஐந்து நாட்களுக்கும் மேலாக உடல் அழுகிய நிலையில் அவரது சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாகச் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு உயிரிழந்தார், மரணத்தில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய பின்னணி உள்ளதா என்பது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பலரின் மன அமைதிக்குத் தன் இசையால் மருந்திட்ட ஒரு மாபெரும் கலைஞன், தனது கடைசி நாட்களில் ஆதரவற்று, மரணித்ததும் கூட உடனடியாகத் தெரியாமல் போன இந்தத் துயரச் சம்பவம் கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
