புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே கொடிவேல் கிழக்கு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயதுடைய இனியவள் என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கொடிவேல் கிழக்கு கிராமத்தில் இருக்கும் சுவர் இடிந்து இனியவள் மீது விழுந்தது.

இதனால் இடிபாடுகளில் சிக்கி சிறுமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.