பதினெட்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தொடக்க ஆட்டத்திலேயே மும்பையை சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் ஆனது மார்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் சீசனில் 43 வயதான எம்.எஸ். தோனி எடை குறைந்த கிரிக்கெட் பேட்டை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கிரிக்கெட் மட்டையின் எடையை சுமார் 10 முதல் 20 கிராம் வரை அவர் குறைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவருக்கு 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள்  டெலிவரி செய்யப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசன் வரை தோனி 1250 முதல் 1300 கிராம் வரை உள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி இரண்டு உலகக் கோப்பை மற்றும் ஐசிஐ சாம்பியன் டிராபி வென்று கொடுத்தார். ஐபிஎல்லில் அவர் தலைமையில் சிஎஸ்கே அணியானது ஐந்து கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.