ஐபிஎல் தொடங்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ தவறு செய்திருக்கும் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்..

இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல் ), 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஐபிஎல்லின் 17வது சீசன் 2024 மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து உள்நாட்டு வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த டி20 லீக் ஒரு முக்கியமான தளமாக இருக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக் உலகளவில் பிரபலமடைந்ததில் முன்னணியில் உள்ளது. ஐபிஎல் சிறந்த வீரர்களை சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு கொண்டுவர ஒரு நல்ல அடித்தளமாக உள்ளது. ஐபிஎல் என்பது உயர்மட்ட, வேகமான கிரிக்கெட், சர்வதேச வீரர்கள் மற்றும் இளம் திறமைகளின் கலவையாகும்.

உலக அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ஐ.பி.எல். அதுமட்டுமில்லாமல் தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகரிப்பதற்கு ஐபிஎல்லும் ஒரு முக்கிய காரணமாகும். பலரும் ஐபிஎல் பார்க்க தொடங்கி தற்போது சர்வதேச அளவில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் ஐபிஎல்லும் ஒரு காரணம் தான்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சிறந்த விஷயம் ஐபிஎல் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தாவின் வழிகாட்டியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போன்ற லீக்கை பிசிசிஐ தொடங்காமல் இருந்திருந்தால் அது மிக மோசமான முடிவாக இருக்கும் என்றும்,இந்திய கிரிக்கெட்டின் நலனில் ஐபிஎல்லின் பங்கு பெரும் உதவியாக உள்ளது என்று கம்பீர் கூறுகிறார் . ஸ்போர்ட்ஸ்கீடா கேள்வி பதில் அமர்வின் போது பிசிசிஐ ஐபிஎல்லை தொடங்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கம்பீரிடம் கேட்கப்பட்டது. இதற்கு கம்பீர் “ஐபிஎல் தொடங்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ எடுத்திருக்கும் மிக மோசமான முடிவாக இது இருந்திருக்கும், ஏனெனில் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நேர்ந்த சிறந்த விஷயம்” என்று கூறினார்.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை ஐ.பி.எல் நடைபெறவுள்ளது. ஆஸி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2024 ஐபிஎல்லுக்காக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரரானார். டிசம்பர் 19 அன்று நடைபெற்ற நட்சத்திர ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 24.75 கோடிக்கு ஸ்டார்க்கை வாங்கியது.

20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இரண்டாவது வீரர். 11.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஹர்ஷல் படேல், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்திய வீரர் ஆவார். 72 வீரர்களை 230.45 கோடி ரூபாய்க்கு பல்வேறு அணிகள் வாங்கியுள்ளன.

டாரில் மிட்செல் (ரூ. 14 கோடி, சிஎஸ்கே), அல்சாரி ஜோசப் (ரூ. 11 கோடி, ஆர்சிபி), ரீலி ரோசோவ்  (ரூ. 8 கோடி, பிபிகேஎஸ்), ரோவ்மேன் பவல் (ரூ. 7.40 கோடி, ரூ. ஆர்.ஆர்), ஷாருக்கான் (ரூ. 7.40 கோடி ஐபிஎல் நட்சத்திர ஏலத்தில் ரூ.7.40 கோடி, ஜிடி), குமார் குஷாக்ரா (ரூ. 7.2 கோடி, டிசி) மற்றும் டிராவிஸ் ஹெட் (எஸ்ஆர்எச், ரூ.6.80 கோடி) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.