ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி இருக்கிறார். இவர் 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு சதம், 3 அரை சதம் அடித்துள்ளார். இருப்பினும் அவருடைய ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறது. நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விராட் கோலி குறித்து தற்போது பேசியுள்ளார். அவர் பேசியதாவது, விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் ஆட்டத்தின் நடுவில் தன்னுடைய அதிரடியை இழந்து வருவது போல் தோன்றுகிறது. அவர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் பெங்களூர் அணிக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அவர் விளையாட வேண்டும். கோலி ஆட்டத்தை தவறவிடுகிறார். மேலும் அவர் பெரிய ஷாட்களை முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.