இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த இளம் வீரராக சுப்பன் கில் திகழ்கிறார். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் டி20 உலக கோப்பை போட்டி ஆரம்பிக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தற்போது சுப்மன் கில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம். ஆனால் தற்போது நான் டி20 உலக கோப்பை போட்டியை பற்றி யோசிக்கவில்லை.

அப்படி நான் யோசித்தால் அது குஜராத் அணிக்கும் எனக்கும் நான் இழைக்கும் அநீதியாகும். நான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவேன். ஆனால் தற்போது என்னுடைய முழு கவனமும் ஐபிஎல் போட்டியின் மீது தான் இருக்கிறது. என்னுடைய அணிக்காக நான் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதோடு சகவீரர்களுக்கும் உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு கடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் உண்டு. அதேபோன்று இன்னொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் நான் அவ்வளவு தூரம் யோசிக்கவில்லை. மேலும் என்னை தேர்ந்தெடுத்தால் அது மகிழ்ச்சி. ஒருவேளை என்னை தேர்வு செய்யாவிட்டால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.