
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 509 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் விளையாடி 500 ரன்கள் குவித்திருந்தார். இதனால் அவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரிடம் இருந்து ருதுராஜ் ஆரஞ்சு தொப்பையை கைப்பற்றியுள்ளார். மேலும் 509 ரன்கள் அடித்ததன் மூலம் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.