உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் கண்ட்ஹை கிராமத்தில் கணவரை
இழந்த பெண் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.