ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு மொத்தம் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது. அதாவது கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டி அடுத்த வருடம் பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடுமா என்ற கேள்வி அதிக அளவில் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மத்திய அரசு அனுமதி கொடுக்காது என்றே கூறப்படுவதால் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் துபாய் அல்லது இலங்கையில் வைக்குமாறு பிசிசிஐ நிர்வாகம் ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதற்கு ஐசிசி ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்தியா போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படும். ஒருவேளை இந்தியா போட்டியிலிருந்து விலகினால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது இந்தியாவுக்கு அடுத்தபடியாக 9-வது இடத்தில் இலங்கையும், 10-வது இடத்தில் நெதர்லாந்து அணியும் இருக்கிறது. மேலும் ‌ இந்திய அணி போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் இலங்கை அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்று போட்டியில் கலந்து கொள்ளும்.