ICC ஆண்கள் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செப்டம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை https://tickets.cricketworldcup.com என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துவித போட்டிகளுக்கும் சேர்த்து சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.