மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் உணவு வழங்க சிவ் போஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தாலிகளில் மானிய விலையில் 10 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயனடைந்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த மாதம் வரை மட்டுமே 4.25 கோடி தாலிகளில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் திட்டத்தை விரிவு படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தாலிகளுக்கு பதிலாக பத்து லட்சம் தாலிகளில் உணவு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.