மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய அறிவிப்பு எதுவுமே இருக்காது என்று முன்னதாகவே கூறப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய கொள்கை மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஏனெனில் 2024 முழு மத்திய பட்ஜெட் ஏப்ரல், மே மாதங்களில் புதிய அரசு அமைந்த பிறகு தான் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அது குறித்த ஒரு பெரிய சுவாரசியமான தகவல் குறித்து இப்போது பார்க்கலாம்.

அதாவது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ஆம் தேதி தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அது ஏனென்றால் என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு முன்னதாக ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்களில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாத கடைசியில் தான் பட்ச தாக்கல் செய்யப்படும் என்ற வழக்கமிருந்து. ஆனால் 2017 ஆம் வருடம் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் மரபானது மாற்றப்பட்டது.

அப்போதுதான் முதல்முறையாக பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது .அதன் பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யும் மரபு மாறியது. பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு முதல் காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தின் கீழ் காலனித்துவ காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதே ஆகும். இருப்பினும் தேதியை மாற்ற இது மட்டும் காரணம் கிடையாது. பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்வதால் புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்களுக்கு தயாராகும் கால அவகாசம் மிக குறைவு என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அப்போதைய நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.