புதிய நிதியாண்டு தொடங்கப்போகும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ‘ஃபாஸ்டேக்’ (FASTag) சந்தா கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஆண்டு சந்தாவாக ரூ.3,000 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் இது ரூ.3,075 ஆக உயர்த்தப்பட உள்ளது. அதாவது வாகன ஓட்டிகள் கூடுதலாக ரூ.75 செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு இந்த விலை உயர்வு ஒரு கூடுதல் சுமையாகவே பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, இந்த ஆண்டுக் கட்டண முறையானது வணிகப் பயன்பாடு இல்லாத (சொந்த உபயோகப் பயன்பாடு) வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கானிக் சர்வீஸ் போலவே, ஆண்டுதோறும் ஃபாஸ்டேக் கணக்கைச் புதுப்பிக்கும் வாடிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் திருத்தப்பட்ட புதிய கட்டணத்தையே செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வால் ஏற்கனவே தவித்து வரும் சாமானிய மக்களுக்கு, இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போல அமைந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
