விஜய்யின் அடுத்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது காஷ்மீரில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. மொத்த படக்குழுவும், அங்கே இருக்க திரிஷா மட்டும் 3 நாட்களில் சென்னைக்கு  திரும்பினார். இதை தெரிந்த நம்ம நெட்டிசன்ஸ் திரிஷா-வை முதல் சீனிலேயே லோகேஷ் கொன்றுவிட்டாரா என கலாய்த்து மீம்ஸ் போட்டிருந்தனர்.

இந்நிலையில் த்ரிஷா  ட்விட்டரில் படம் தொடர்பான சில ட்வீட்களையும் நீக்கியிருந்தார். இதனால் திரிஷா, படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பழைய ட்வீட்களை நீக்குவது அவரது பழக்கம் என்றும் படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி த்ரிஷா பற்றி ஒருபுறம் வதந்தி பரவ அதே நேரத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பற்றியும் ஒரு விஷயம் பேசப்பட்டுச்சு.

என்னவென்றால் ஜிம்மில் கமலஹாசனும், அமலாபாலும் சேர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக அதை பார்த்த கமல் ரசிகர்களோ இந்தியன் படத்தில் இருந்த சந்துரு மாதிரியே கமல் இன்னும் இளமையாக இருக்கிறாரே என்று புகழத் தொடங்கினார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வயசிலும் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று பேசத் தொடங்கினார்கள். அதை பார்த்த நெட்டிசன்களோ அவசரப்படாதீங்க.

இது 2017 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் பழைய புகைப்படம் தற்போது புதிது போல வலம் வந்து கொண்டிருக்கிறது என்று கூற, அதன் பிறகு அந்த புகைப்படம் பற்றிய பேச்சு அடங்கியது. த்ரிஷாவுக்கும் கமலஹாசனுக்கும் பழைய புகைப்படத்தால் தற்போது புதுப்பேச்சு கிளம்பி இருக்கிறது. பழைய புகைப்படங்கள் புதிது போல வைரலாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டது. இதை பார்த்தவர்களோ எ ஏய் எப்புட்றா ஒரே நேரத்தில இப்படி எல்லாம் நடக்குது என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர்.