
நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த முடிவு தேர்தல் அறிவிப்புக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், புதிதாக அமல்படுத்தப்பட்ட முடிவு அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.