சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு கால்பதித்து பிரபலமான சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர் ஆவார். இவர் தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியனாக கலக்கி இருக்கிறார். இதனிடையே ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரெனன்று உடல் மெலிந்து போனது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோபோ ஷங்கர் கூறியதாவது “ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்கலாம் என்று டயட் இருந்தேன். எனினும் அந்த நேரத்தில் மஞ்சள் காமாலை நோய் வந்து விட்டது. இரண்டும் சேர்ந்து என்னுடைய உடலை உருக்கி விட்டது. இதற்கிடையில் நான் இறந்து விட்டேன் என்று கூட சிலர் பொய்யாக எழுதுகிறார்கள் என ரோபோ ஷங்கர் சோகத்துடன் பேசி உள்ளார்.