நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமாக ஜொலித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது மைதானத்திற்கு வெளியே செய்த ஒரு சிறு செய்கை இணையத்தில் மீம்ஸ்களாகத் தெறித்து வருகிறது. சமீபத்தில் ஒரு போட்டி முடிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பேருந்தில் ஏறியபோது, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் வைபவ் பெயரைச் சொல்லி விடாமல் கத்தினர்.
“அண்ணே கொஞ்சம் எங்களப் பாருண்ணே..” (Aare dekhlo bhai) என்று அவர்கள் தொடர்ந்து கூச்சலிட, பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த வைபவ், அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் ஒரு நக்கலான ‘சைடு ஐ’ (Side-eye) பார்வையைப் பார்த்தார்.
Vaibhav Sooryavanshi reached Lucknow for the match against LSG.
Paps are not even letting my blud listen to his favourite Bhojpuriya songs.😭🤭 pic.twitter.com/Omvu9YgBkf
— Rupesh Kumar (@drona_17) April 20, 2026
இந்தச் சின்ன ரியாக்ஷன் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “வைபவ் இப்போதே பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்” என்றும், “அந்தப் பார்வையில் எவ்வளவு நக்கல் இருக்கிறது” என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மிகச்சிறிய வயதிலேயே ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைத்த வைபவ், தனது ஆட்டத்தால் மட்டுமின்றி இது போன்ற குறும்புத்தனமான செய்கையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
