இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் அனைவரும் ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளால் சிரமத்திற்கு உள்ளான ரயில்வே தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதாவது ஏசி ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிப்பதாகவும் ரயிலில் உள்ள துண்டுகள், தலையணைகள் ஆகியவை காணாமல் போவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் பலரும் ரயில்வே கொடுத்த பெட்ஷீட் மற்றும் டவல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால் இனிமேல் யாராவது ஒரு பயணி அப்படி செய்தால் தண்டிக்கப்படுவார் என ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏசி ரயிலில் பயணிக்கும் போது கொடுக்கப்படும் பல பொருள்களும் காணாமல் போவதால் இந்திய ரயில்வேக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது. இந்நிலையில் இவ்வாறு பொருட்களை திருடுவது சட்டப்படி தவறு என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் மீது ரயில்வே சொத்து சட்டத்தின் கீழ் ரயில்வே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.