இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில் உங்களின் புகைப்படம் பிடிக்கவில்லை என்றால் அதனை மாற்றிக் கொள்ளலாம். அதனைப் போலவே முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் போன்ற ஏதேனும் ஒன்றை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செய்துவிடலாம். நீங்கள் சமீபத்தில் புதிய மொபைல் எண்ணை மாற்று இருந்தால் அதனை ஆதாரில் புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று அதனை செய்து விடலாம்.

இணையத்தில் ஆதார் அட்டையில் பதிவு செய்த மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

முதலில் uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பதிவு மையத்தை கண்டறி என்பதை கிளிக் செய்ய வேண்டும். இது அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தை கண்டறிவதற்கு உதவும். அங்கு உங்களின் மொபைல் எண்ணை புதுப்பித்து விடலாம்.

அங்கு மொபைல் எண்ணை புதுப்பிக்க நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். தவறுகளை தவிர்ப்பதற்கு தகவல்களை இரண்டு முறை சரிபார்க்க மறக்க வேண்டாம்.

அந்த படிவத்தை ஆதார் உதவி நிர்வாகி இடம் சமர்ப்பித்ததும் அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் ஏற்கனவே உள்ள ஆதார் அட்டை போன்ற தேவையான அனைத்து ஆதார் ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆதார் அட்டையில் உள்ள தொலைபேசி எண்ணை புதுப்பிப்பதற்கு நீங்கள் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதன் பிறகு ஆதார் உதவி நிர்வாகி உங்களுக்கு புதுப்பிப்பு கோரிக்கை எண் சீட்டை வழங்குவார். உங்களின் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் கோரிக்கையின் நிலையை கண்காணிக்க இது உதவும்.

இதனைத் தொடர்ந்து myaadhaar.uidai.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் உங்களின் மொபைல் எண் புதுப்பித்தலின் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ள முடியும்.