நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூ.80ல் இருந்து ரூ.70 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு. மானிய விலை தக்காளியை ரூ. .70 ஆக குறைத்து விற்குமாறு NABARD, NCCF ஆகிய கூட்டுறவு அமைப்புகளுக்கு நுகர்வோர் விவகாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கூட்டுறவு அமைப்புகள் தக்காளியை விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.