இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்வி புதிய வரையறுக்கப்பட்ட கால அளவை கொண்ட அம்ரித் காலாஸ் என்ற வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெற முடியும். இதில் மாதாந்திரம் மற்றும் காலாண்டு அரையாண்டு இடைவெளியில் வட்டி செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதுவே மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி விகிதமாக 7 புள்ளி 6 சதவீதம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் sbi ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடி ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.