இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் எஸ்பிஐ அடிப்படை வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. BPLR 70 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 14.85 சதவீதமாக உள்ளது. அடிப்படை விகிதம் 9.40 சதவீதத்தில் இருந்து 10.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்றவர்களின் இஎம்ஐ உயர்த்தப்படுவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. அடிப்படை விகிதம் மற்றும் அனைத்து கடன்களுக்கும் பொருந்தும் குறைந்தபட்ச வட்டி விகிதம். BPLR அடிப்படை விகிதத்திற்கு முந்தைய கடன்களுக்கான விகிதமாகும். இந்த அறிவிப்பு sbi வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.