கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் பாஸ்கர் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்ருதி (32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ நாளில் பாஸ்கர் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஸ்ருதி தன் கணவனை பூரிக்கட்டையால் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால் போலீசிடம் அவரது மனைவி தூங்கும் போது இறந்து விட்டதாக கூறினார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததால் பின்னர் ஸ்ருதியை பிடித்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.