புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண் சம்பவ நாளில் வேலை முடிந்த பிறகு ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கிவிட்டு தன்னுடைய தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் ஸ்கூட்டியில் வந்தார்.

அவர் 27 வயது பெண்ணிடம் அட்ரஸ் கேட்பது போல் திடீரென பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக அந்த வாலிபர் அங்கிருந்து ஸ்கூட்டியில் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஜெகதீஸ்வரன் என்பவர் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் வாலிபரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.