பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான்  இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லூசியானாவில் ‘ஜோய்’ என்ற ஒரு நாயின் நாக்கானது  12.7 செ.மீ. உள்ளது. இதன் காரணமாக இந்த நாய் சமீபத்தில் கின்னஸ் சாதனை படைத்தது. இதுவரை பெஸ்பி என்ற நாய் 9.49 செ.மீ உயரத்துடன் வைத்திருந்த சாதனையை ‘ஜோய்’ முறியடித்துள்ளது.

இதனால் அதன் உரிமையாளர் சாடி வில்லியம்ஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளார். “ஒவ்வொரு முறையும் தங்கள் செல்ல நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் போதும், ​​​​மக்கள் அதனுடன் வந்து விளையாடிவிட்டு, வியந்து பார்த்து செல்வார்கள்” என்று சாடி வில்லியம்ஸ் கூறினார்.