
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் #நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.
99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் #நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும்…
— M.K.Stalin (@mkstalin) December 26, 2023