இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லடாக்கில் உள்ள இந்திய – சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சீன வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறி அன்பை பகிர்ந்து கொண்டனர்.

சமீபத்தில் பிரதமர் மோடி அவர்களும் சீனா அதிபர் ஜின்பிங் அவர்களும் சந்தித்து நீண்ட நாட்களாக இருந்து வந்த எல்லை பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.