இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கத்தாரில் உள்ள எரிவாயு நிலையங்கள் தாக்கப்பட்டதால் உலகளாவிய எல்என்ஜி (LNG) விநியோகம் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எதிர்காலத்தில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955’-ன் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனிமேல் ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம் எவ்வளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது, எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் விநியோக விபரங்கள் என்ன என்பது குறித்த முழுமையான தகவல்களை ‘PPAC’ என்ற அரசுத் துறையிடம் கட்டாயம் வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் மூலம் நாட்டில் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இருப்பை அரசு நேரடியாகக் கண்காணிக்கும் என்பதால், செயற்கையான தட்டுப்பாடு உருவாவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
