18வது ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பும்  போட்டியாக ஐபில் உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியின் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள்  கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். சென்னை, மும்பை , டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளுமே போட்டி நடக்கும் நகரங்களுக்கு விமானத்தில் பயணம் செய்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் நேரம் மிகக் குறைவு என்றாலும் பயணிக்கும் தூரம் மற்றும் நேரம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

இதில் அதிக தூரம் பயணிக்கும் அணியாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது. சுமார் இரண்டு மாதம் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட பெங்களூர் அணியானது நகரங்களுக்கு விமானத்தில் பயணம் செய்கிறது. அந்த அணியின் வீரர்கள் லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில் மொத்தம் 17 ,048 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்கிறார்கள். பெங்களூர் அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் 1,500 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. ஐபிஎல் கோப்பையை இந்த முறையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்கோடு விளையாடிருக்கும் பெங்களூரு அணி வீரர்களுக்கு அதிக தூர பயணம் என்பது சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் இந்த அணிக்கு சாதகமாக இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு என்பது மிக முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்கும் வீரர்கள் போட்டியில் விளையாட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பறக்க வேண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.