ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் லோகோவை மாற்றினார். இந்நிலையில் புதிய லோகோவான எக்ஸ்சை ராட்சத வடிவில் தயார் செய்து அதனை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமையகத்தின் கட்டிட உச்சியில் பொருத்தியுள்ளார்.

ஒளி வீசும் அந்த லோகோவின் வெளிச்சம் தலைமையகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்து அங்குள்ளவர்கள் தங்களால் தூங்க முடியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். எலான் மஸ்கின் இந்த செயலால் ஜன்னல்களுக்கு நாங்கள் திரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இத்தகைய பெரிய லோகோவை வைக்க எலான் அனுமதி வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.