சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகள்  வாட்ஸ்அப் அல்லது பிற சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறுமிகளுக்கு இதய ஈமோஜிகளை அனுப்புவது குற்றம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி குவைத்தில் உள்ள சிறுமிகளுக்கு இதய ஈமோஜிகளை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 குவைத் தினார் அபராதமும் விதிக்கப்படும் என்று குவைத் வழக்கறிஞர் ஹயா அல் ஷலாஹி தெரிவித்துள்ளார்.

அதேபோல் சவுதியில் இதய ஈமோஜிகளை அனுப்புபவர்கள்  சிறையில் அடைக்கப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 100,000 சவுதி ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும். இது பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையதாக வரையறுக்கப்பட்டுள்ளது.