எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையேயான விரைவு ரயில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்ட மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். அதனைப் போலவே மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் திங்கட்கிழமை நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

வாரம் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு விரைவு ரயிலை வாரம் இரண்டு முறை நிரந்தரமாக இயக்கம் வகையில் ரயில்வே வாரியம் புதிய உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில் கோட்டையம், திருவல்லா, கொல்லம், புனலூர், செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.