சர்வதேச மகளிர் தின விழாவில் விஜய் அறிவித்த மாதம் ரூ.2500 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தொடர்ந்து, பாஜக தரப்பிலிருந்து முதல் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன், “ஆரம்பத்தில் இலவசங்கள் அறிவிக்கக் கூடாது என்று பேசிவிட்டு, இப்போது தவெக தலைவர் இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறார். அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள அவர் இதுவரை எதையும் செயல்படுத்தி நிரூபிக்கவில்லை.

வெறும் நடிகரைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறும் என்று நினைப்பது தவறு; அந்த எம்.ஜி.ஆர் காலம் எப்போதோ முடிந்துவிட்டது” என்று காரசாரமாக விமர்சித்தார். திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்டங்களைக் குறைகூறிவிட்டு, அதே பாணியில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை விஜய் வெளியிடுவது முரண்பாடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.