கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதியன்று புகாரளித்தார். இதனையடுத்து நில அபகரிப்பு தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செயய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பிருத்விராஜிடம் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டது சிபிசிஐடி. இந்த  விசாரணைக்குப் பின் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.