
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சில படங்களில் நாயகியாக நடித்த நிலையில் அதன் பிறகு சினிமா பக்கம் காணவில்லை. பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதில் நிறைய பிரச்சனைகளை சந்தித்த இவர் வெளியே வந்த பிறகு நடிப்பு மற்றும் பிசினஸ் என பிசியாக இருந்தாலும் தனக்கான நேரத்தை கொண்டாடி வருகின்றார்.
இவருடைய திருமண வாழ்க்கை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மூன்று முறை திருமணம் செய்து அது எதுவுமே அவருக்கு சரியாக அமையாததால் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது ரசிகர்கள் அவரிடம் அதிகம் உங்களுடைய நான்காவது திருமணம் எப்போது என்று தான் கேட்டு வருகிறார்கள். அப்படி ரசிகர் ஒருவர் திருமணம் பற்றி கேட்ட நிலையில் அதற்கு வனிதா எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதில் அளித்துள்ளார்.