நடிகை லிசி- டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்தார். இந்த நிலையில் நடிகை கல்யாணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேஜிக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து வியந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ் எனக்கும் கற்றுக்கொடு என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். இதனையடுத்து அவருடைய கமெண்டுக்கு பதில் அளித்த நடிகை கல்யாணி,” முன்பு என்னுடைய வீட்டிற்கு நீ வந்திருந்த போது இதே போல மேஜிக் செய்ததை மறந்து விட்டாயா? என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

 

A post shared by IDream Media (@idreammedia)