
பீகார் மாநிலத்தில் உள்ள அராரிரியா மாவட்டத்தில் ஒரு விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த வயல்வெளியில் தற்போது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையே இல்லாத இடத்தில் வயல்வெளியில் பாலத்தை கட்டியுள்ளனர். இந்தப் பாலம் அரசாங்கத்தின் சாலை கட்டுமான துறையால் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் உத்தரவிட்டுள்ளார். இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக பகுதி மக்கள் கூறிய நிலையில் தற்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கமும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது ரூ.3 கோடி மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் இருக்கிறது என்றும் முதலில் பாலத்தை கட்டியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் பீகாரில் சமீபகாலமாக 14 பாலங்கள் வரை அடுத்தடுத்து இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.